வாடை காற்று



                             Tamil kavithai - வாடை காற்று



பூவையற்ற தோட்டத்தின்
பூவுற்ற கிளைகள் தூதனுப்ப
விலாசமற்ற என் வாசற்கதவினை
தட்டி நிற்கிறது வடை காற்று...

அதுகடந்து வந்த பூக்கள்
பூப்பெய்திய செய்தியை
சொல்ல வந்திருக்கலாம்

புல்லாங்குழலில் விழுந்து
இசையாக பிறந்து - என் காதை
குளிரவைக்க வந்திருக்கலாம்

என்னவளின் நுரையீரல் தீண்டிய இன்பத்தை
என்னிடம் கிசுகிசுக்க வந்திருக்கலாம்

இவ்வளவு தாமதமாக வந்ததால்
கதவினை திறக்காமல் இருந்தேன்
அறையினுள் ..

நீண்ட நேரம் முயற்சித்து
மூர்ச்சியாகி பின்பு கதவின் துவாரம் வழியாக
உள்ளே நுழைந்தது வாடை காற்று...

என் கால் விரலுக்கு சொடக்கெடுத்தது
அதை பிடித்து தலையணை அடியில்போட்டு
தூங்கிவிட்டேன் ...

மறுநாள் காலையில்
என் மெத்தைக்கு அருகில்
கொதித்து கொண்டிருந்தது
தேநீராக ...

 

Comments

Popular posts from this blog

கவிப்பெண்

மழை

மூக்கும் முழியும்