Posts

Showing posts with the label iyarkkai

ஹைக்கூ

Image
  கைநழுவி தவறி விழுந்த நாழிகையில் தெறிக்குது கண்ணீர் துளிகள் ‪#‎பிரிவு‬ கொஞ்சம் கோபமாய் உறவாடிவிட்டேன் கிள்ளிவிட்டால் கள்ளி #குண்டூசி பல மலடித்தாய்கள் இன்று நிறைமாத கர்பிணிகள் #அடைமழையில் குளங்கள் பலர்முகம் பார்த்துக்கொண்டிருந்த குளத்தில் நானும் விளிம்பில் நின்று கொண்டிருந்தேன் பின்னிருந்த எவனோ தள்ளிவிட்டான் பாவி தத்தளித்துகொண்டிருக்கிறேன் மீளாமல் #காதல் பிறவி குருடு #சட்டம் இதன்பின் வாழ்க்கை என்னவாகுமோ ஏதாகுமோ என்ற அச்சத்திலே கட்டி கொடுக்கிறார்கள் #தேர்வு தாள் அறிவுக்கனியை நான் பறிக்க வளைந்து கொடுக்கும் ஞான மரங்கள் #ஆசிரியர்கள்

வாடை காற்று

Image
                                     Tamil kavithai - வாடை காற்று பூவையற்ற தோட்டத்தின் பூவுற்ற கிளைகள் தூதனுப்ப விலாசமற்ற என் வாசற்கதவினை தட்டி நிற்கிறது வடை காற்று... அதுகடந்து வந்த பூக்கள் பூப்பெய்திய செய்தியை சொல்ல வந்திருக்கலாம் புல்லாங்குழலில் விழுந்து இசையாக பிறந்து - என் காதை குளிரவைக்க வந்திருக்கலாம் என்னவளின் நுரையீரல் தீண்டிய இன்பத்தை என்னிடம் கிசுகிசுக்க வந்திருக்கலாம் இவ்வளவு தாமதமாக வந்ததால் கதவினை திறக்காமல் இருந்தேன் அறையினுள் .. நீண்ட நேரம் முயற்சித்து மூர்ச்சியாகி பின்பு கதவின் துவாரம் வழியாக உள்ளே நுழைந்தது வாடை காற்று... என் கால் விரலுக்கு சொடக்கெடுத்தது அதை பிடித்து தலையணை அடியில்போட்டு தூங்கிவிட்டேன் ... மறுநாள் காலையில் என் மெத்தைக்கு அருகில் கொதித்து கொண்டிருந்தது தேநீராக ...  

நிழல்

Image
Tamil kavithai - நிழல் நீ என் தாயுமில்லை தாரமுமில்லை இருந்தும் உன்மடி தேடுகிறேன் இளைப்பாற ... ~மர நிழல்