ஹைக்கூ

 


கைநழுவி

தவறி விழுந்த

நாழிகையில்

தெறிக்குது

கண்ணீர் துளிகள்

‪#‎பிரிவு‬


கொஞ்சம்

கோபமாய்

உறவாடிவிட்டேன்

கிள்ளிவிட்டால் கள்ளி

#குண்டூசி


பல

மலடித்தாய்கள்

இன்று நிறைமாத

கர்பிணிகள்

#அடைமழையில் குளங்கள்


பலர்முகம்

பார்த்துக்கொண்டிருந்த

குளத்தில் நானும் விளிம்பில்

நின்று கொண்டிருந்தேன்

பின்னிருந்த எவனோ

தள்ளிவிட்டான்

பாவி தத்தளித்துகொண்டிருக்கிறேன்

மீளாமல்

#காதல்


பிறவி

குருடு

#சட்டம்


இதன்பின்

வாழ்க்கை

என்னவாகுமோ

ஏதாகுமோ

என்ற அச்சத்திலே

கட்டி கொடுக்கிறார்கள்

#தேர்வு தாள்


அறிவுக்கனியை

நான் பறிக்க

வளைந்து

கொடுக்கும்

ஞான மரங்கள்

#ஆசிரியர்கள்

Comments