உன் கொலுசொலி

                Tamil kavithai - உன் கொலுசொலி

கொலுசணிந்து

நீ வந்தால்

என் தெருவெல்லாம்

திருவிழா...

******************************************************

என்

மெத்தையில்

தினமும் கேட்கும்

கெட்டிமேளம்

உன் கொலுசொலி...

******************************************************

என்

பார்வையை

கயிற்றில் கட்டி

வைக்கிறேன்

அதை அவிழ்த்து விட்டு செல்கிறது

உன் கொலுசொலி...

******************************************************

அடிக்கடி

என் மனதை

உன் கொலுசெனும்

விலங்கிலுட்டு உன்னோடு

இழுத்து செல்கிறாய் ....

******************************************************

நீ

கொலுசணிந்து

நடக்கயிலே - இன்பம்

தேன் வந்து பாயுது

காதினிலே...

******************************************************

உன் கொலுசொலி

தமிழுக்கு இன்னொரு

சலங்கை ஒலி

எனக்கு

இன்னொரு

தேசிய கீதம்...

Comments

Popular posts from this blog

மூக்கும் முழியும்

கடற்கரை காதல்