Posts

Showing posts with the label kavithaigal

உன்னிதழ்கள்

 திக்கி திணறி படிக்கிறேன் ஒருசில வரிகள் கொண்ட அழகிய கவிதையை உன்னிதழ்கள்

மூக்கும் முழியும்

Image
  Tamil kavithai - மூக்கும் முழியும் சிலையின் கலையும் வதனத்தில் பொழியும் சிங்கார சித்திரம் சித்தத்தில் நிலையும் மஞ்சத்தின் பாவனை நெஞ்சத்தில் குழையும் செந்நெல்லின் கூர்மை வெண்விழியில் அழியும் முரடனை வெல்லும் மூக்கும் முழியும் இருதய உள்ளல் விழிகளில் விளையும் ஊடல் பொழுதில் வார்த்தைகள் தொலையும் மாலை நேர மகர கண்ணில மதுரம் சொட்ட கவிதை வழியும் நெஞ்சம் கொஞ்சம் மஞ்சம் கெஞ்சும் ஆசை மோதலில் இன்பமே மிஞ்சும் எஞ்சும் வாழ்வில் தஞ்சம் என்னோடென்றாயின் நேருமா வாழ்வில் அன்பு பஞ்சம்..

கடற்கரை காதல்

Image
Tamil kavithai - கடற்கரை காதல் ~பெரும்பாலான நமது ஊடல்கள் கரையேறுவது இந்த கடற்கரையில் தான்.. ~இந்த கடல் நீராய் உப்பு கரிக்கிறது நீ இல்லாத நிமிடங்கள் ... ~நீ காதில் வைத்த சங்கை என் காதில் வைத்தேன் அதில் கேட்டது காதல் சத்தம் ... ~மிளகாய் பஜ்ஜி காரம் என்றாய் இது இனிக்கிறது என்றது மிளகாய் பஜ்ஜி என்னிடம்... ~இந்த பஞ்சுமிட்டாயை போல சிவக்கிறாய் நானாக நெருங்குகையில் ... ~கொஞ்ச நேரம் இங்கே வந்து நில் அலைகள் கால்நனைத்து கொள்ளட்டும் .... ~மூச்சு முட்ட முத்து குளிக்கிறேன் உன் காதலிலே ... ~எனை உனக்குள் இழுத்துச்செல்வதால் நீயும் பேரலையே ... ~உன்னை இந்த கடற்கரையில் பார்த்த யாரோ ஒருவன்தான் கடல் கன்னி கதையை உருவாக்கியிருக்க கூடும் ...  

வாடை காற்று

Image
                                     Tamil kavithai - வாடை காற்று பூவையற்ற தோட்டத்தின் பூவுற்ற கிளைகள் தூதனுப்ப விலாசமற்ற என் வாசற்கதவினை தட்டி நிற்கிறது வடை காற்று... அதுகடந்து வந்த பூக்கள் பூப்பெய்திய செய்தியை சொல்ல வந்திருக்கலாம் புல்லாங்குழலில் விழுந்து இசையாக பிறந்து - என் காதை குளிரவைக்க வந்திருக்கலாம் என்னவளின் நுரையீரல் தீண்டிய இன்பத்தை என்னிடம் கிசுகிசுக்க வந்திருக்கலாம் இவ்வளவு தாமதமாக வந்ததால் கதவினை திறக்காமல் இருந்தேன் அறையினுள் .. நீண்ட நேரம் முயற்சித்து மூர்ச்சியாகி பின்பு கதவின் துவாரம் வழியாக உள்ளே நுழைந்தது வாடை காற்று... என் கால் விரலுக்கு சொடக்கெடுத்தது அதை பிடித்து தலையணை அடியில்போட்டு தூங்கிவிட்டேன் ... மறுநாள் காலையில் என் மெத்தைக்கு அருகில் கொதித்து கொண்டிருந்தது தேநீராக ...  

கன்னக்குழி காரியே

Image
                       Tamil kavithai - கன்னக்குழி காரியே கன்னக்குழி காரியே உன்ன பாக்க வேண்டியே ஒத்தயில காத்துக்கிடந்தேன் வந்த வழி போனியே... ஒத்த சட பின்னலுல நீ வந்த முன்னால குலுங்கிடாத என்மனசு பாய்மரம் போலாட... கண்ஜாடை காட்டிப்போன கலவரந்தான் மூட்டிப்போன தொண்டக்குழி விக்குச்சடி வார்த்த ஒன்னு சிக்குச்சடி பொழுது சாய முன்னால வைகையாறு கரைமேல ஓடியாடி விளையாடி ஓடையெல்லாம் ஏங்கவெச்சோம் மணல்வீடு கட்டிவெச்சு மின்மினிய ஒட்டிவெச்சு குடி போக முன்னால மழை வந்து கெடுத்ததே அந்த கத நினைவிருக்கா .... சோலையிலே அந்தி வேலையில உன் சேலையில எழுதுன கவிதை இன்னுமிருக்கா ... புது தாவணி கட்டிக்கிட்டு செம்பருத்தி சூடிக்கிட்டு தேவதையா முன்ன வந்த கேள்வியில பதிலை வெச்சு நீ கேட்ட ... அழகா இருக்கா ...? னு அடியே... உன்னோடு சேர்ந்த பூவும் மணக்குதடி...!!!ன்னு நா சொல்ல .... சிங்கார நடையிட்டு சினுங்கிட்டே நீ போன... அந்த கத நினைவிருக்கா ... காலம் கடந்து வந்தாச்சு உன்கையும் புடிச்சாச்சு கண்மணியின் காதுக்குள்ள கவி கவியா மொழிஞ்சாச்சு .... பழைய கத பேசுனா பொழுதொண...

உன் கொலுசொலி

Image
                Tamil kavithai - உன் கொலுசொலி கொலுசணிந்து நீ வந்தால் என் தெருவெல்லாம் திருவிழா... ****************************************************** என் மெத்தையில் தினமும் கேட்கும் கெட்டிமேளம் உன் கொலுசொலி... ****************************************************** என் பார்வையை கயிற்றில் கட்டி வைக்கிறேன் அதை அவிழ்த்து விட்டு செல்கிறது உன் கொலுசொலி... ****************************************************** அடிக்கடி என் மனதை உன் கொலுசெனும் விலங்கிலுட்டு உன்னோடு இழுத்து செல்கிறாய் .... ****************************************************** நீ கொலுசணிந்து நடக்கயிலே - இன்பம் தேன் வந்து பாயுது காதினிலே... ****************************************************** உன் கொலுசொலி தமிழுக்கு இன்னொரு சலங்கை ஒலி எனக்கு இன்னொரு தேசிய கீதம்...

நிழல்

Image
Tamil kavithai - நிழல் நீ என் தாயுமில்லை தாரமுமில்லை இருந்தும் உன்மடி தேடுகிறேன் இளைப்பாற ... ~மர நிழல்  

விழியியல்

Image
Tamil kavithai - விழியியல் கற்ற அறிவியல் பொறியியல் எல்லாம் மறக்கடித்துவிட்டது      உன் விழியியல்....  

எனக்கு பிடித்த கவிதை

Image
Tamil kavithai - எனக்கு பிடித்த கவிதை எனக்கு பிடித்த கவிதை எது என்று கேட்கிறாள் அவள்தான் விடை என்று     அறியாமலே... 💓  

ஊடலிலும்

Image
Tamil kavithai - ஊடலிலும் கூடல் போல ஊடலில் எப்படி காதல் இருக்கும் என்றாள்... வெயிலுக்கும் மழைக்கும் துணை இருக்கும் ஒற்றை குடை போல என்றேன்...!!!  

கவிப்பெண்

Image
Tamil kavithai - கவிப்பெண் வெளியில் இறங்கி நீ வர ... மேகமொன்று கவிமழையை உன்மேல் வாசிக்க தொடங்கிற்று ... கவியின் எதுகை உன் கையையும் மோனை உன் முந்தானையையும் நனைத்திருந்தது... உன் காதணியில் பட்டு தெரித்துக்கொண்டிருந்தது அணி ஒன்று ... உன் நெற்றியில் விழுந்த உருபுகள் வெவ்வேறாக பிரிந்து நீந்தி கொண்டிருக்கிறது உன் மாரிலே... ஈறில்லா சிகையிலே ஈரமாய் சொட்டுகிறது ஈரசைசீர் ஒன்று ... உன் இதழிலே இயல் இசையமைத்து நடனம் ஆடிக்கொண்டிருக்கிறது ... இறுதியாக நீ உடை பிழிகையில் கவிநடை வழிந்தோடியது .. இதை பார்த்து நிற்கும் எனக்கு ஒரு சந்தேகம்... துளி துளியாய் நனைந்திருப்பதால்-உனை துளிப்பா என்பதா ? நீ ஆறடி மழையாதலால் உனை வெண்பா என்பதா... ---Arshad---  

நிசப்த நொடிகள்

Image
    Tamil Kavithai - நிசப்த நொடிகள் களங்கமில்லா மனதில் கல்லெறியும் கன்னியாய் ... வெறுமை கீறலின் காயத்தில் விரல் பாய்க்கும் விரக்தியாய்... பாசிகொண்ட பாறையில் பயணிக்கும் பாமரனாய்... மாசக் கடைசியில் வெறித்து பார்க்கும் சட்டை பையாய்... அனுமதியின்றி நீரில் நுழையும் ஆகய வெண்ணிலவாய்... விடை சொல்லாமல் விடைபெற்ற விடலையின் கடைசி கண்ணீராய் ... மதி கலங்கி விதி முடிக்கும் மரண படுக்கையாய் ... "உருவெடுக்கிறது நிசப்த நொடிகள்"....