கன்னக்குழி காரியே
Tamil kavithai - கன்னக்குழி காரியே
கன்னக்குழி காரியே
உன்ன பாக்க வேண்டியே
ஒத்தயில காத்துக்கிடந்தேன்
வந்த வழி போனியே...
ஒத்த சட பின்னலுல
நீ வந்த முன்னால
குலுங்கிடாத என்மனசு
பாய்மரம் போலாட...
கண்ஜாடை காட்டிப்போன
கலவரந்தான் மூட்டிப்போன
தொண்டக்குழி விக்குச்சடி
வார்த்த ஒன்னு சிக்குச்சடி
பொழுது சாய முன்னால
வைகையாறு கரைமேல
ஓடியாடி விளையாடி
ஓடையெல்லாம் ஏங்கவெச்சோம்
மணல்வீடு கட்டிவெச்சு
மின்மினிய ஒட்டிவெச்சு
குடி போக முன்னால
மழை வந்து கெடுத்ததே
அந்த கத நினைவிருக்கா ....
சோலையிலே அந்தி
வேலையில உன் சேலையில
எழுதுன கவிதை
இன்னுமிருக்கா ...
புது தாவணி கட்டிக்கிட்டு
செம்பருத்தி சூடிக்கிட்டு
தேவதையா முன்ன வந்த
கேள்வியில பதிலை வெச்சு
நீ கேட்ட ... அழகா இருக்கா ...? னு
அடியே...
உன்னோடு
சேர்ந்த பூவும் மணக்குதடி...!!!ன்னு
நா சொல்ல ....
சிங்கார நடையிட்டு
சினுங்கிட்டே நீ போன...
அந்த கத நினைவிருக்கா ...
காலம் கடந்து வந்தாச்சு
உன்கையும் புடிச்சாச்சு
கண்மணியின் காதுக்குள்ள
கவி கவியா மொழிஞ்சாச்சு ....
பழைய கத பேசுனா
பொழுதொண்ணும் தெரியாது
என்னான்னு போய் பாரு
தொட்டில்ல குழந்தை அழுகுது....

Comments
Post a Comment