Posts

Showing posts with the label kathal

என்னவள்

          Tamil kavithai - என்னவள்   இடைவிடாது பயணிக்கிறது என் கவிதை வாகனம் அதில் நீ அமர்ந்திருப்பதால்... ****************************************************** சோட்டா பீம் காக காத்திருக்கும் குழந்தையை போல காத்திருக்கிறேன் நீ உதடு சுளிக்கும் கணத்திற்காக.... ****************************************************** எங்காவது கண்ணாடி இருந்தால் அங்கு நின்று உன்னை ரசித்துவிட்டு தான் செல்கிறது உன் பிம்பம் கூட.... ****************************************************** படிக்காமல் போன பரிட்சையில் பாஸ் ஆனதுபோல இருக்கும் நான் போடும் மொக்கைக்கு நீ சிரிக்கும் போது ... ****************************************************** லட்டு விலிருந்து ஒரு பூந்தியை வாயில் வைக்கிறாய் தனது இடப்பெயர்ப்பில் எந்த மாற்றத்தையும் உணராமலிருக்கிறது அந்த பூந்தி... ****************************************************** தொலைவிலே ஒரு ஐஸ் கிரீம் கடையை பார்த்தேன் .. நெருங்க நெருங்க தான் தெரிந்தது அது நீ என்று ****************************************************** கொலுசணிந்து நீ வந்தால் என் தெ...

உன்னிதழ்கள்

 திக்கி திணறி படிக்கிறேன் ஒருசில வரிகள் கொண்ட அழகிய கவிதையை உன்னிதழ்கள்

மூக்கும் முழியும்

Image
  Tamil kavithai - மூக்கும் முழியும் சிலையின் கலையும் வதனத்தில் பொழியும் சிங்கார சித்திரம் சித்தத்தில் நிலையும் மஞ்சத்தின் பாவனை நெஞ்சத்தில் குழையும் செந்நெல்லின் கூர்மை வெண்விழியில் அழியும் முரடனை வெல்லும் மூக்கும் முழியும் இருதய உள்ளல் விழிகளில் விளையும் ஊடல் பொழுதில் வார்த்தைகள் தொலையும் மாலை நேர மகர கண்ணில மதுரம் சொட்ட கவிதை வழியும் நெஞ்சம் கொஞ்சம் மஞ்சம் கெஞ்சும் ஆசை மோதலில் இன்பமே மிஞ்சும் எஞ்சும் வாழ்வில் தஞ்சம் என்னோடென்றாயின் நேருமா வாழ்வில் அன்பு பஞ்சம்..

பல்லக்கு பாவை

  பல்லக்கில் மினுங்கும் பார்வையில் சிணுங்கும் பாவை தானவளாம் சந்ததி சொல்லும் சந்திர பொலிவும் சுந்தர புன்னகையாம் தேன்தனில் திளைத்த சௌந்தர்ய நாணம் அவளின் அணிகலனாம் பூமாலை எல்லாம் பாமாலை ஆக்கும் அவளின் மேலங்கமாம் மாதுளை வண்ணமும் மதுவின் கிண்ணமும் மாதவளின் கன்னங்களாம் பவள பளிங்கும் பனைமர கள்ளும் மோகன மேனியின் உவமைகளாம் முள்ளிலே மலர்ந்திட்டாய் சொல்லிலே மலைத்திட்டாய் மழலையாய் மனதை சொல் ஊடுகதிர் நீயடி ஊடுருவுவதேனடி உன்னவனின் ஊனின் உள் தங்கம் தலைகுனிய தலைகுனிந்து நடமாடும் தலைவி நீயல்லவா தலைவிக்கு துணையாக தரணியில் தோண்றிற்ற தலைவன் நானல்லவா ...

பருவ மழை நானுனக்கு

Image
Tamil kavithai - பருவ மழை நானுனக்கு கொல்லும் விழி நீயெனக்கு மெல்லும் மொழி நானுனக்கு .. அண்டமடி நீயெனக்கு அன்னை மடி நானுனக்கு .. *** அகமெல்லாம் சிலிர்க்குதே தோழி நின்றன் வாஞ்சையிலே ***எந்தாய் மொழி மெல்லுகிற தேன்மொழியே...!!! நிலவின் மகள் நீயெனக்கு அணியுங் கழல் நானுனக்கு .. சிந்தும் கவி நீயெனக்கு ஏந்தும் புவி நானுனக்கு .. ***சொல்லுருவி கூறுமிடத்து நெஞ்சுருகி போவதேனோ ***சிந்தையினை சிறைகொண்ட செந்தேனே...!!! உருவ சிலை நீயெனக்கு பருவ மழை நானுனக்கு .. ஆறாந் திணை நீயெனக்கு ஆயுல் துணை நானுனக்கு .. ***நங்காய் நாணயிலே நாடியெண் கூடுவதேன் ***உழலும் நினதன்பிலே நெகிழ்ந்தேனே...!!!

சாயங்கால வேளையில

Image
                 Tamil kavithai - சாயங்கால வேளையில சாயங்கால வேளையில சமஞ்சமக போகையில தலையில சூடிவிட அக்கம்பக்கம் ஒருபூவுமில்ல மருதாணி வெச்ச கைய்யு செவந்துபோகமுன்னால கன்னம் ஒன்னு செவக்குதே தவறி விழுந்த முத்தத்துல விடல புள்ள ஒன்ன பாக்க விடவிடுனு ஓடிவந்தேன் வெடக்குன்னு திரும்பிக்கிட்டு வீறாப்பா போறவளே சிலுசிலுனு காத்தடிக்க குளுகுளுனு உடல் சிலுக்க முந்தானைய என்மேல போர்வையா போட்டவளே நீ தாவணிக்கு மாறயில எனக்கு காதல் கர்ப்பம் தரிச்சுது பலமாசமா நானும் நிறமாசம் பொண்ணுபோல ஓரத்துல கிடந்த ஓலைப்பாயும் ஒறங்கியாச்சு ஒய்யாரமா கண்ணுக்குள்ள அவ ஓய்வெடுக்க நா ஓரங்கவில்ல எல்லாத்தயும் எழுத்துவெச்சான் அது எப்ப நடக்கும் மறச்சிவெச்சான் பந்தல் நட கால்லிருக்கு தாலி செய்ய ஆளிருக்கு சொல்லி தொல வார்த்தை ஒன்னு அந்த நாளும் காத்திருக்கு

சதுரங்கம்

Image
                                          Tamil  kavithai - சதுரங்கம் என் ராணி எனக்கெதிராக போர் தொடுக்கிறாள்.. ~சதுரங்கம் ...

கடற்கரை காதல்

Image
Tamil kavithai - கடற்கரை காதல் ~பெரும்பாலான நமது ஊடல்கள் கரையேறுவது இந்த கடற்கரையில் தான்.. ~இந்த கடல் நீராய் உப்பு கரிக்கிறது நீ இல்லாத நிமிடங்கள் ... ~நீ காதில் வைத்த சங்கை என் காதில் வைத்தேன் அதில் கேட்டது காதல் சத்தம் ... ~மிளகாய் பஜ்ஜி காரம் என்றாய் இது இனிக்கிறது என்றது மிளகாய் பஜ்ஜி என்னிடம்... ~இந்த பஞ்சுமிட்டாயை போல சிவக்கிறாய் நானாக நெருங்குகையில் ... ~கொஞ்ச நேரம் இங்கே வந்து நில் அலைகள் கால்நனைத்து கொள்ளட்டும் .... ~மூச்சு முட்ட முத்து குளிக்கிறேன் உன் காதலிலே ... ~எனை உனக்குள் இழுத்துச்செல்வதால் நீயும் பேரலையே ... ~உன்னை இந்த கடற்கரையில் பார்த்த யாரோ ஒருவன்தான் கடல் கன்னி கதையை உருவாக்கியிருக்க கூடும் ...  

கன்னக்குழி காரியே

Image
                       Tamil kavithai - கன்னக்குழி காரியே கன்னக்குழி காரியே உன்ன பாக்க வேண்டியே ஒத்தயில காத்துக்கிடந்தேன் வந்த வழி போனியே... ஒத்த சட பின்னலுல நீ வந்த முன்னால குலுங்கிடாத என்மனசு பாய்மரம் போலாட... கண்ஜாடை காட்டிப்போன கலவரந்தான் மூட்டிப்போன தொண்டக்குழி விக்குச்சடி வார்த்த ஒன்னு சிக்குச்சடி பொழுது சாய முன்னால வைகையாறு கரைமேல ஓடியாடி விளையாடி ஓடையெல்லாம் ஏங்கவெச்சோம் மணல்வீடு கட்டிவெச்சு மின்மினிய ஒட்டிவெச்சு குடி போக முன்னால மழை வந்து கெடுத்ததே அந்த கத நினைவிருக்கா .... சோலையிலே அந்தி வேலையில உன் சேலையில எழுதுன கவிதை இன்னுமிருக்கா ... புது தாவணி கட்டிக்கிட்டு செம்பருத்தி சூடிக்கிட்டு தேவதையா முன்ன வந்த கேள்வியில பதிலை வெச்சு நீ கேட்ட ... அழகா இருக்கா ...? னு அடியே... உன்னோடு சேர்ந்த பூவும் மணக்குதடி...!!!ன்னு நா சொல்ல .... சிங்கார நடையிட்டு சினுங்கிட்டே நீ போன... அந்த கத நினைவிருக்கா ... காலம் கடந்து வந்தாச்சு உன்கையும் புடிச்சாச்சு கண்மணியின் காதுக்குள்ள கவி கவியா மொழிஞ்சாச்சு .... பழைய கத பேசுனா பொழுதொண...

உன் கொலுசொலி

Image
                Tamil kavithai - உன் கொலுசொலி கொலுசணிந்து நீ வந்தால் என் தெருவெல்லாம் திருவிழா... ****************************************************** என் மெத்தையில் தினமும் கேட்கும் கெட்டிமேளம் உன் கொலுசொலி... ****************************************************** என் பார்வையை கயிற்றில் கட்டி வைக்கிறேன் அதை அவிழ்த்து விட்டு செல்கிறது உன் கொலுசொலி... ****************************************************** அடிக்கடி என் மனதை உன் கொலுசெனும் விலங்கிலுட்டு உன்னோடு இழுத்து செல்கிறாய் .... ****************************************************** நீ கொலுசணிந்து நடக்கயிலே - இன்பம் தேன் வந்து பாயுது காதினிலே... ****************************************************** உன் கொலுசொலி தமிழுக்கு இன்னொரு சலங்கை ஒலி எனக்கு இன்னொரு தேசிய கீதம்...

பௌர்ணமி அவள்

Image
                    Tamil kavithai - பௌர்ணமி அவள் கவிதையிடம் கவிதை  சொல்லிய  பழக்கம் தான்.... மலருக்கு மலர் சூட்டிய  பழக்கம் தான் ... பெர்ணமியிடம் பிறையை  காட்டி சிலாகித்தது...   

விழியியல்

Image
Tamil kavithai - விழியியல் கற்ற அறிவியல் பொறியியல் எல்லாம் மறக்கடித்துவிட்டது      உன் விழியியல்....  

எனக்கு பிடித்த கவிதை

Image
Tamil kavithai - எனக்கு பிடித்த கவிதை எனக்கு பிடித்த கவிதை எது என்று கேட்கிறாள் அவள்தான் விடை என்று     அறியாமலே... 💓  

ஊடலிலும்

Image
Tamil kavithai - ஊடலிலும் கூடல் போல ஊடலில் எப்படி காதல் இருக்கும் என்றாள்... வெயிலுக்கும் மழைக்கும் துணை இருக்கும் ஒற்றை குடை போல என்றேன்...!!!  

கவிப்பெண்

Image
Tamil kavithai - கவிப்பெண் வெளியில் இறங்கி நீ வர ... மேகமொன்று கவிமழையை உன்மேல் வாசிக்க தொடங்கிற்று ... கவியின் எதுகை உன் கையையும் மோனை உன் முந்தானையையும் நனைத்திருந்தது... உன் காதணியில் பட்டு தெரித்துக்கொண்டிருந்தது அணி ஒன்று ... உன் நெற்றியில் விழுந்த உருபுகள் வெவ்வேறாக பிரிந்து நீந்தி கொண்டிருக்கிறது உன் மாரிலே... ஈறில்லா சிகையிலே ஈரமாய் சொட்டுகிறது ஈரசைசீர் ஒன்று ... உன் இதழிலே இயல் இசையமைத்து நடனம் ஆடிக்கொண்டிருக்கிறது ... இறுதியாக நீ உடை பிழிகையில் கவிநடை வழிந்தோடியது .. இதை பார்த்து நிற்கும் எனக்கு ஒரு சந்தேகம்... துளி துளியாய் நனைந்திருப்பதால்-உனை துளிப்பா என்பதா ? நீ ஆறடி மழையாதலால் உனை வெண்பா என்பதா... ---Arshad---