சாயங்கால வேளையில

             Tamil kavithai - சாயங்கால வேளையில


சாயங்கால வேளையில சமஞ்சமக போகையில

தலையில சூடிவிட அக்கம்பக்கம் ஒருபூவுமில்ல


மருதாணி வெச்ச கைய்யு செவந்துபோகமுன்னால

கன்னம் ஒன்னு செவக்குதே தவறி விழுந்த முத்தத்துல


விடல புள்ள ஒன்ன பாக்க விடவிடுனு ஓடிவந்தேன்

வெடக்குன்னு திரும்பிக்கிட்டு வீறாப்பா போறவளே


சிலுசிலுனு காத்தடிக்க குளுகுளுனு உடல் சிலுக்க

முந்தானைய என்மேல போர்வையா போட்டவளே


நீ தாவணிக்கு மாறயில எனக்கு காதல் கர்ப்பம் தரிச்சுது

பலமாசமா நானும் நிறமாசம் பொண்ணுபோல


ஓரத்துல கிடந்த ஓலைப்பாயும் ஒறங்கியாச்சு

ஒய்யாரமா கண்ணுக்குள்ள அவ ஓய்வெடுக்க நா ஓரங்கவில்ல


எல்லாத்தயும் எழுத்துவெச்சான்

அது எப்ப நடக்கும் மறச்சிவெச்சான்

பந்தல் நட கால்லிருக்கு

தாலி செய்ய ஆளிருக்கு

சொல்லி தொல வார்த்தை ஒன்னு

அந்த நாளும் காத்திருக்கு



Comments

Popular posts from this blog

கவிப்பெண்

மழை

மூக்கும் முழியும்