பல்லக்கு பாவை
பல்லக்கில் மினுங்கும்
பார்வையில் சிணுங்கும்
பாவை தானவளாம்
சந்ததி சொல்லும்
சந்திர பொலிவும்
சுந்தர புன்னகையாம்
தேன்தனில் திளைத்த
சௌந்தர்ய நாணம்
அவளின் அணிகலனாம்
பூமாலை எல்லாம்
பாமாலை ஆக்கும்
அவளின் மேலங்கமாம்
மாதுளை வண்ணமும்
மதுவின் கிண்ணமும்
மாதவளின் கன்னங்களாம்
பவள பளிங்கும்
பனைமர கள்ளும்
மோகன மேனியின் உவமைகளாம்
முள்ளிலே மலர்ந்திட்டாய்
சொல்லிலே மலைத்திட்டாய்
மழலையாய் மனதை சொல்
ஊடுகதிர் நீயடி
ஊடுருவுவதேனடி
உன்னவனின் ஊனின் உள்
தங்கம் தலைகுனிய
தலைகுனிந்து நடமாடும்
தலைவி நீயல்லவா
தலைவிக்கு துணையாக
தரணியில் தோண்றிற்ற
தலைவன் நானல்லவா ...
Comments
Post a Comment