கவியும் அவளும்

 Tamil kavithaigal - கவியும் அவளும்

நான் கவிதை

சொல்லிக் கொண்டே

இருக்கும் போது

நீ சிணுங்கும் அழகில்

மெருகேருகிறது கவிதையுடன்

சேர்ந்து என் ரசனையும்...

உனை ரசிக்குது

என்னோடு சேர்ந்து

என் கவிதையும்...


முடி முதல்

அடி வரை இனிப்பதால்

நீயும் அடிக்கரும்பே ...


எதிர்பார்ப்பின்

இம்சை

முடியும்

கொலுசொலியின்

தொடக்கத்தில்


நிசப்தங்களின்

கயிற்றில்

ஊஞ்சலாடுகிறது

நினைவுகள் ...


இறந்த காலம்

மீளாதென்றால்

எதிர்காலம்

நிச்சயம்

இல்லை யென்றால்

நீ என்றும்

என் நிகழ்காலம்

 


Comments

Popular posts from this blog

மூக்கும் முழியும்

கடற்கரை காதல்

உன் கொலுசொலி